Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக்போட்டி: தென்கொரியாவுக்கு வடகொரியா நன்றி தெரிவிப்பு

In உலகம்
Updated: 05:05 GMT, Feb 13, 2018 | Published: 04:33 GMT, Feb 13, 2018 |
0 Comments
1267
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரியக் குழுவினரை சிறந்த முறையில் வரவேற்றமைக்கு தென்கொரிய அதிகாரிகளுக்கு, வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் நன்றி தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங் மற்றும் வடகொரிய விழாக் குழுவின் தலைவர் கிம் ஜொங் நாம் ஆகியோர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் வடகொரியாவுக்குத் திரும்பியுள்ளார். இதனையடுத்தே, தென்கொரியாவுக்கு, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நேற்று (திங்கட்கிழமை) நன்றி தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரியக் குழுவினரைக் கவரும் வகையில், தென்கொரியா நடந்துகொண்டதுடன், தமது குழுவினரின் விளையாட்டு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தமைக்காகவும், நன்றி தெரிவிப்பதாக வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடகொரியக் குழுவினருக்கு, தென்கொரியாவினால் அளிக்கப்பட்ட வரவேற்பு உபசாரம் தொடர்பாக வடகொரியக் குழுவினர், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக வடகொரிய ஜனாதிபதி தனது திருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg