Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி அறிவிப்பு? – குழப்பமடையும் அரசியல்!

In இலங்கை
Updated: 05:50 GMT, Feb 13, 2018 | Published: 05:05 GMT, Feb 13, 2018 |
0 Comments
3212
This post was written by : Puvanes
ranil001

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி புதிய பிரதமர் நியமிப்பு தொடர்பான ஆலோசனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பிரபலம் ஒருவரை புதிய பிரதமராக்கும் முடிவுகள் குறித்து குறித்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆலோசனைக் கூட்டத்தின் போது சுதந்திரக்கட்சியில் புதிய அமைச்சர்களை நியமிக்க வழங்கப்பட்ட ஆலோசனையை அடுத்து, சுதந்திரக்கட்சியில் அமைச்சர்களை தன்னால் நியமிக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பதவியை நீக்கிவிட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச அல்லது சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவரை பிரதமராக்கும் ஆலோசனைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திரக்கட்சிக்கு சாதகமாக அமையாததனைத் தொடர்ந்து அரசியலில் பல்வேறுபட்ட மாற்றங்களளும், குழப்பங்களும் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)