Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் தேசியக் கொள்கையிலிருந்து மாறப்போவதில்லை: மணிவண்ணன்

In இலங்கை
Updated: 05:47 GMT, Feb 13, 2018 | Published: 05:47 GMT, Feb 13, 2018 |
0 Comments
1212
This post was written by : Varshini

தெற்கில் யார் வென்றாலும் தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட மாட்டோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கியே பயணிப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வருகிறாரா அல்லது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வருகிறாரா என்பதை வைத்து தமிழ் தேசிய அரசியலை வழிவகுத்துக்கொள்ள முடியாது. யார் வந்தாலும் எங்களுடைய தேசியவாத அரசியலையும் எங்களுடைய நிலைப்பாடுகளையும் மாற்ற மாட்டோம்.

யார் வந்தாலும் எமக்கு கவலையில்லை. ஆனால் எந்தெந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருகின்றதோ அந்தந்த சூழ்நிலைகளில் எங்களுடைய தமிழ் தேசிய தளத்திலிருந்து நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் எங்களுக்கு உண்டு.

எமது மக்களின் இன அழிப்புக்கு எதிராகவும் அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் நாம் தொடர்ந்தும் போராடுவோம். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg