Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குண்டு அகற்றப்பட்டது: வழமைக்குத் திரும்பிய லண்டன் நகர் விமான நிலையச் சேவை

In
Updated: 05:11 GMT, Feb 13, 2018 | Published: 05:11 GMT, Feb 13, 2018 |
0 Comments
1266
This post was written by : Suganthini

தேம்ஸ் நதிக்கரைக்கு அருகில் காணப்பட்ட குண்டொன்று பாதுகாப்பாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, லண்டன் நகர் விமான நிலையத்தினூடான விமானப் போக்குவரத்துச் சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட குண்டை ஒத்த 500 கிலோகிராம் நிறையுடைய குண்டொன்று தேம்ஸ் நதிக்கரையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, லண்டன் நகர் விமான நிலையம் நேற்றுமுன்தினம் இரவு மூடப்பட்டதுடன், விமான நிலையத்தினூடான விமானப் போக்குவரத்துகளும் நேற்றுவரை (திங்கட்கிழமை) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

அத்துடன், குண்டு காணப்பட்ட இடத்தை அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தியால், சில குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

இந்தக் குண்டை கடற்படையினர் அகற்றியுள்ளதால்,  லண்டன் நகர் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், விமானப் போக்குவரத்துகளும் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன. தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் திரும்பியுள்ளனர்.

லண்டன் நகர் விமான நிலையத்தினூடான விமானப் போக்குவரத்துகள் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றுவரை பாதிக்கப்பட்டதால், சுமார் 16 ஆயிரம் பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg