Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எடின்பேர்க் நகருக்கு இளவரசர் ஹரி விஜயம்!

In
Published: 05:36 GMT, Feb 13, 2018 |
0 Comments
1046
This post was written by : Suganthini
harry

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கிலும் திருமண பந்தத்தில் இணையவுள்ள நிலையில், பொது ஈடுபாட்டின் ஒருபகுதியாக ஸ்கொட்லாந்தின் எடின்பேர்க் நகருக்கு இந்த வார இறுதியில்  விஜயம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில், ஸ்கொட்லாந்திலுள்ள சமூக நிறுவனமான கஃபேக்கு இவர்கள் இருவரும் விஜயம் செய்வதுடன்,  பொதுமக்கள் மத்தியில் பணியாற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி உரிய அதிகாரிகளுடன்  இவர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும்,  கென்சிங்கடன் அரண்மனை தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்கொட்லாந்தில் வீட்டு வசதியின்றியுள்ள ஒரு லட்சம் பேருக்கு உணவு மற்றும் பானங்களை ஒவ்வொரு வருடமும் கஃபே சமூக நிறுவனம் வழங்கி வருவதுடன், வீட்டு வசதியின்றியுள்ளவர்களை தமது நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளது.

இளவரசர் ஹரியும், அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கிலும் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளதுடன், இவர்களின் திருமணம் வின்ட்ஸர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)