Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்து – பிரித்தானியா அரசியல் முட்டுக்கட்டைக்கு விரைவில் தீர்வு!

In
Updated: 05:57 GMT, Feb 13, 2018 | Published: 05:57 GMT, Feb 13, 2018 |
0 Comments
1171
This post was written by : Suganthini

வட அயர்லாந்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டை கூடிய விரைவில் முடிவுக்கு வருமென்று தாம் நம்புவதாக, அயர்லாந்துப் பிரதமர் லியோ வரட்கர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துப் பிரதமர் லியோ வரட்கரும், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும், அரசியல் கட்சிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வட அயர்லாந்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டையைத் தீர்ப்பதற்கு இறுதி முடிவுக்கு வருமாறு கட்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இப்பிரச்சினைக்கான உடன்பாடு இந்த வார இறுதியில் இரு தரப்பினர்களுக்குமிடையில் எட்டப்படும்.

எனவே, வட அயர்லாந்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் காணப்படும் அரசியல் முட்டுக்கட்டை பிரச்சினை விரைவில் முடிவுக்கு வருமென்று நாம் நம்புகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg