அமித்ஷா மகனின் சொத்துக்குவிப்பு தொடர்பில் மோடி விவாதிக்காதது ஏன்? – ராகுல்

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாகச் சொத்து குவித்தது குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே ராகுல்காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ மத்திய அரசு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு கூறுகிறார்.
அமித்ஷாவின் மகனின் சொத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடியாக இருக்கிறது.
அமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதுபற்றி பிரதமர் பேச தயங்குவது ஏன் என வினவியுள்ளார்.
மேலும் மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் சித்தராமையா கொண்டு வந்து செயற்படுத்தி உள்ளார். மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்துள்ளது” எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.