Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொங்கா நாட்டில் சூறாவளி: நாடாளுமன்றக் கட்டடம் பாரிய சேதம்

In உலகம்
Published: 06:52 GMT, Feb 13, 2018 |
0 Comments
1098
This post was written by : Suganthini

பசுபிக் நாடான தொங்காவில் வீசிய சூறாவளி காரணமாக, அந்நாட்டின் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்றக் கட்டடம் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

மேற்படி நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) இரவு வீசிய பாரிய சூறாவளி காரணமாக, பலத்த சேதங்கள் ஏற்பட்டதுடன், நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றக் கட்டடத்தின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளதுடன், மின்சார இணைப்புகளும் அறுந்துள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சூறாவளி காரணமாக, ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி தற்காலிகத் தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.

மேலும், அந்நாட்டில் சூறாவளி வீசும் அபாயம் காணப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)