Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்வருடனான பேச்சுவார்த்தை குறித்து ஸ்டாலின் விளக்கம்

In இந்தியா
Updated: 08:19 GMT, Feb 13, 2018 | Published: 07:26 GMT, Feb 13, 2018 |
0 Comments
1244
This post was written by : Kemasiya

போக்குவரத்து கட்டண உயர்வை குறைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் பிரகாரம் செயற்பட்டால் மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கத் தேவையில்லை என, முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளதாக  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர்,  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், “இருபத்தேழு பரிந்துரைகள் அடங்கிய பேருந்து கட்டண ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

குறித்த அறிக்கையின் மூலம், போக்குவரத்து கழகங்களை பொதுமக்களின் சேவையாக கருதி அதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். டீசல் பெற்றோல் மீது மத்திய அரசு விதித்திருக்கும் வரிகள் அதிகம் என்பதால்  அவற்றை ரத்து செய்து, ஒரே அளவான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 27 பரிந்துரைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பின் போது போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரும் இருந்ததாகவும் எல்லோர் முன்னிலையிலும் தான் இந்த பரிந்துரைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் நிர்வாகத்தை சீராக செயற்படுத்தமுடியாத நிலையில் அரசு உள்ளமையால், எதிர்க்கட்சியாகிய தாம் இந்த ஆலோசனையை  வழங்கியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை தமது பரிந்துரையை  நிராகரிக்காமல் கருத்தில் எடுத்து செயற்பட்டால் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், அவ்வாறு செயற்படுத்தப்படாத பட்சத்தில் மீண்டும் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg