Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதானப் பேச்சு: அமெரிக்காவின் மத்தியஸ்தத்துக்கு பலஸ்தீனம் மறுப்பு

In உலகம்
Published: 07:30 GMT, Feb 13, 2018 |
0 Comments
1106
This post was written by : Suganthini

இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை தாம் விரும்பவில்லையென, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி அபாஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை மொஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே,  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அமெரிக்காவின் நடவடிக்கை காரணமாக, இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா மத்தியஸ்தம் வகிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.

‘எமக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை காரணமாக, மத்திய கிழக்கின் எந்தவொரு நடவடிக்கைக்கும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க நாம் மறுக்கின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு, புதியதொரு மத்தியஸ்தத்துக்கு, பலஸ்தீன ஜனாதிபதி அபாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

புனித நகராகக் காணப்படும் ஜெருசலேமை, தமது தலைநகரென்று இஸ்ரேலும், கிழக்கு ஜெருசலேம் தமது தலைநகரென்று பலஸ்தீனமும் கூறிவந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,  ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)