Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா படம் திறக்க எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? – விஜயதரணி

In இந்தியா
Published: 09:07 GMT, Feb 13, 2018 |
0 Comments
1145
This post was written by : Kemasiya
dfdrf

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைத்தமைக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை கொறடா விஜயதரணி ஆதரவு தெரிவித்தமை முறையல்ல என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரும் இன்று ஊழல் குற்றவாளியாக சிறையில் தான் இருந்திருப்பார்.

அவர் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர் மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது தவிர, அவர் நிரபராதி என தெரிவிக்கப்படவில்லை.

எனவே இவ்வாறான சட்ட சிக்கல்கள் உள்ளதால் தான் அவரின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

காங்கிரஸ் எதிர்ப்பை வெளியிட்டதை பொருட்படுத்தாது சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைப்பதற்கு விஜயதரணி ஆதரவு வழங்கியுள்ளது முறையான செயல் அல்ல.

அதையும் மீறி ஜெயலலிதா நோய்வாய்பட்டு இருந்தபோது ராகுல் பார்க்க சென்றார், திருநாவுக்கரசர் பாக்க சென்றார்,  அவ்வாறிருக்கையில் அவரின் படத்தை சட்டசபையில் வைக்க எதிர்ப்பது தவறு என்ற விஜயதரணியின் கருத்து குதர்க்கமானது” எனவும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)