Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவில் முன்கூட்டி பொதுத்தேர்தல் நடத்த வலியுறுத்து

In
Published: 08:01 GMT, Feb 13, 2018 |
0 Comments
1077
This post was written by : Suganthini

தென்னாபிரிக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தலை நடத்துமாறு, அந்நாட்டின் இரு பிரதான எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தியுள்ளன.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமாவை, பதவி விலகுமாறு ஆளும் கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் அழுத்தம் விடுத்துவரும் நிலையில், அந்நாட்டில் முன்கூட்டி பொதுத்தேர்தலை நடத்த இரு பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று (திங்கட்கிழமை) அழைப்பு விடுத்துள்ளனர்.

தென்னாபிரிக்காவில் பொதுத்தேர்தல் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையிலேயே, எதிர்க்கட்சிகளின் மேற்படி வலியுறுத்தல் வெளிவந்துள்ளது.

இதற்கிடையில், தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜகோப் ஷுமாவை, பதவி விலகுமாறு, அந்நாட்டின் ஆளும் கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் 48 மணிநேர கால அவகாசம் வழங்கியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல், தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் ஜகோப் ஷுமா, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இந்நிலையில், ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி ஷுமா நீக்கப்பட்டதுடன், அக்கட்சிக்கு புதிய தலைவராக அந்நாட்டின் துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)