Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜஸ்தான் ரோயல் அணியில் ஆலோசகராக இணைகிறார் ஷேன் வோர்ன்

In கிாிக்கட்
Updated: 08:44 GMT, Feb 13, 2018 | Published: 08:44 GMT, Feb 13, 2018 |
0 Comments
1128
This post was written by : Elakkiya

ராஜஸ்தான் ரோயல் அணியின் ஆலோசகராக அவுஸ்ரேலிய முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணியின் ஆலோசகராக அவர் செயற்படவுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ள ஷேன் வோர்ன், “ராஜஸ்தான் ரோயல் அணியை வழிநடத்துவதற்காக கிடைத்த இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஆரம்பத்தை ராஜஸ்தான் ரோயல் அணியில் வீரராக இருந்து வென்றதாக தெரிவித்த ஷேன் வோர்ன், அற்புதமான நிகழ்வுகள் இருப்பதாக தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ராஜஸ்தான் ரோயல் அணி வீரராக 55 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய ஷேன் வோர்ன் 57 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் ஆரம்ப தொடரை ராஜஸ்தான் ரோயல் அணி வெற்றிபெறுவதற்கு ஷேன் வோர்னின் பங்களிப்பும் அதிகமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg