Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொச்சி துறைமுகத்தில் விபத்து: ஐவர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 09:07 GMT, Feb 13, 2018 | Published: 08:40 GMT, Feb 13, 2018 |
0 Comments
1043
This post was written by : Puvanes
ggg

கேரள மாநிலம்,  கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட தீயை , தீயணைப்பு படையினர் சென்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், மீட்பு பணியையும் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சொந்தமான சாகர் பூஷன் என்ற கப்பலில் இன்று பராமரிப்பு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, அதன் கொள்கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்’ என, நகர பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)