Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோனியின் செயற்திறன் கவலை அளிக்கிறது: கிறிஸ் ஸ்ரீகாந்த்

In கிாிக்கட்
Updated: 09:08 GMT, Feb 13, 2018 | Published: 09:08 GMT, Feb 13, 2018 |
0 Comments
1956
This post was written by : Elakkiya

இந்திய வீரர் மகேந்திரசிங் தோனியின் செயற்திறன் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள அணியின் முன்னாள் தலைவர் கிறிஸ் ஸ்ரீகாந்த் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா  ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தென் ஆபிரிக்க தொடரில் ரோஹித் ஷர்மாவின் செயல்திறன் மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரோஹித் ஷர்மாவின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றது. சமீபகாலமாக தோனி அதிகபட்ச ஓட்டங்களை எடுப்பதற்கு தவறிவிட்டார். ஹர்திக் பாண்ட்யாவும் நிலைத்தன்மையுடன் விளையாடுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று ஐந்தாவது போட்டி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg