Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தின் தமிழ் அண்ணா வளர்த்ததல்ல ஆண்டாள் வளர்த்தது: தமிழிசை

In இந்தியா
Updated: 09:34 GMT, Feb 13, 2018 | Published: 09:34 GMT, Feb 13, 2018 |
0 Comments
1144
This post was written by : Kemasiya

தமிழகத்தின் தமிழ் அண்ணா வளர்த்த தமிழல்ல ஆண்டாள் வளர்த்த தமிழ் என தமிழகத்திற்கான பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பா.ஜ.க.சார்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற புதிய வரவுசெலவுத்திட்டம் தொடர்பான மக்கள் விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ தமிழகம் பெரியார் மண்ணல்ல பெரியாழ்வார் வாழ்ந்த மண்.

மதுரை மீனாட்டி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து விசாரணை உரிய முறையில் நடத்தப்பட வேண்டும்.

ஆன்மீக அரசியலை நடத்தவுள்ளதாக நடிகர் கமலஹாசன் கூறிவருகிறார். ஆனால் முதன்முதலில் ஆன்மீக அரசியலை முன்னெடுத்தது பா.ஜ.க. தான் .

அத்துடன் வரவுசெலவுத்திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறைகூறி வருகிறார். அவர் முதலில் தனது கட்சியில் தேர்ச்சி பெறவேண்டும் அதன் பின்னர் மோடியை குறை சொல்லட்டும்” என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg