Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலேசிய அரச அலுவலகத்தில் தீ: 600 பேர் வெளியேற்றம்

In உலகம்
Updated: 09:21 GMT, Feb 13, 2018 | Published: 09:21 GMT, Feb 13, 2018 |
0 Comments
1218
This post was written by : Suganthini

மலேசியாவிலுள்ள ஊழியர் சேமலாப நிதி அலுவலகத்தில் தீ பரவியதன் காரணமாக, அலுவலகத்திலிருந்து 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பணி நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்,  திடீரென்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது, அலுவலகத்திலிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும்,  மறு அறிவித்தல்வரை மேற்படி அலுவலகம் மூடப்பட்டிருக்குமென, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg