Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியலில் திடீர் மாற்றம் – நாட்டை விட்டு வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி!

In இலங்கை
Updated: 15:33 GMT, Feb 13, 2018 | Published: 09:42 GMT, Feb 13, 2018 |
0 Comments
3841
This post was written by : Puvanes

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இலங்கையை விட்டுச் சென்று இங்கிலாந்தில் குடியேறவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்த அத்தனகல்ல பிரதேசத்தில், சுதந்திரக்கட்சி படுதோல்வியடைந்த காரணத்தினால் அவர் மனவிரக்தியடைந்து இங்கிலாந்து செல்லவுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்திரிக்காவின் அதிகாரத்தின் கீழ் இருந்த அத்தனகல்ல பிரதேசத்தை இம்முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு பொதுஜன பெரமுன கைப்பற்றியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.

அதனைத் தொடர்ந்து சந்திரிக்கா தனது மகனான விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் ஈடுபடுத்தும் முயற்சியினைக் கைவிட்டுள்ளதாகவும், இங்கிலாந்து செல்லும் அவர் அங்கு நிரந்தரமாக குடியேறும் நிலை காணப்படுவதாகும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன முற்றும் எதிர்பார்க்காத வகையில் மஹிந்த தரப்பின் பொதுஜன பெரமுன அமோக வெற்றியை ஈட்டியிருந்தது. இதன் காரணமாக அரசியலில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)