Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸ், ஸ்கொட்லாந்தில் சீரற்ற காலநிலை!

In
Updated: 09:41 GMT, Feb 13, 2018 | Published: 09:41 GMT, Feb 13, 2018 |
0 Comments
1155
This post was written by : Suganthini

வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

வேல்ஸில் 20 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், பலத்த காற்று வீசக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையில், வேல்ஸில் தரைவழிப் போக்குவரத்து, ரயில் மற்றும் படகுச் சேவைப் போக்குவரத்துகளில் தாமதம் ஏற்படலாமெனவும், வானிலை நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, ஸ்கொட்லாந்தில் இன்று கடும் மழையுடன் பனிப்பொழிவு காணப்படுமெனவும், வானிலை நிலையம் கூறியுள்ளது.

எனவே, ஸ்கொட்லாந்திலுள்ள வாகனச் சாரதிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளள வேண்டுமெனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg