Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணக்காரர் வரிசையில் சந்திரபாபு நாயுடு முதலிடம்

In இந்தியா
Updated: 10:12 GMT, Feb 13, 2018 | Published: 10:12 GMT, Feb 13, 2018 |
0 Comments
1121
This post was written by : Puvanes

இந்தியாவிலுள்ள மாநில முதலமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டப்போது, சந்திரபாபு நாயுடு அதிகளவு சொத்துக்களை கொண்ட முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரிடம் 117 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்த கழகத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தினை , அருணாசல முதலமைச்சர் பீம காண்டு பெற்றுள்ளார். இவரது சொத்து பெறுமதி 130 கோடி ரூபாய் ஆகும். இதில் மூன்றாம் இடத்தினை பஞ்சாப் முதலமைச்சர்  அம்ரீந்தர் சிங் பெற்றுள்ளார். இவரது சொத்து பெறுமதி 48.31 கோடி ரூபாய் ஆகும்.

ஏழ்மையான முதலமைச்சராக திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 26 இலட்சம் ரூபாய் ஆகும். இவருடன் சந்திரபாபு நாயுடுவை ஒப்பிடுகையில், 680 மடங்கு அதிக சொத்துக்கள் காணப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தை மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், (30 இலட்சம் ரூபாய்) மூன்றாம் இடத்தினை காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபாவும் (55இலட்சம் ரூபாய்) பெற்றுள்ளனர்.

காஷ்மீர், மேற்கு வங்காளம் , ராஜஸ்தான் ஆகிய  மூன்று மாநிலங்களில் மாத்திரம் தான் பெண் முதலமைச்சர்கள் காணப்படுகின்றனர். அதேபோன்று வயதான முதலமைச்சராக பஞ்சாப் முதலமைச்சர் அமிரீந்தரும் (74 வயது) , குறைந்த வயதான முதலமைச்சராக , அருணாசல மாநிலத்தைச் சேர்ந்த காண்டுவும் (35 வயது) உள்ளனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg