Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய பேராசிரியர் உயிரிழப்பு

In கனடா
Updated: 12:15 GMT, Feb 13, 2018 | Published: 12:15 GMT, Feb 13, 2018 |
0 Comments
1056
This post was written by : Elakkiya

ஈரானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடிய பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கவஸ் சைய்ட் எமாமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உளவு பார்த்ததாக கடந்த 14 ஆம் திகதி  ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கவஸ் சைய்ட் எமாமி உயரிழந்த தகவல் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதாக கவஸ் சைய்ட் எமாமியின் மகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ளது.

அத்துடன் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக ஈரானிய அதிகாரிகளால் குறிப்பிடப்படுகின்ற போதிலும், அதனை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பதாகவும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பேராசிரியாராக பணியாற்றிய கவஸ் சைய்ட் எமாமி ஈரானில் உள்ள வனவிலங்குகள் பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனராகவும் பட்டியலிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg