Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கையை வரவேற்கின்றோம் -பெ.பிரதீபன்

In இலங்கை
Updated: 10:32 GMT, Feb 13, 2018 | Published: 10:32 GMT, Feb 13, 2018 |
0 Comments
1138
This post was written by : poovannan

நுவரெலியா மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து, 11 உள்ளூராட்சி சபைகளை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை வரவேற்கின்றோம் என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து கூறுகையில், “உள்ளூராட்சி சபைகளின் பலத்தினை பெற்று நாடளாவிய ரீதியில் மக்களின் ஆதரவை பெற்ற, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயல்படுவதற்கான முடிவினை ஆறுமுகன் தொண்டமான் எடுத்துள்ளமையை நாம் பாராட்டுகின்றோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு, அடிப்படை மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு கடந்த மூன்று வருடங்களாக பாரியளவில் முகங்கொடுத்து வருகின்றனர்.

மலையகத்தில் வாழ்கின்ற தொழிலாளர்கள் உட்பட நகர் மற்றும் கிராம பகுதி மக்களின் பின்தங்கியுள்ள அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு காத்திரமான கொள்கையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படுவதற்காக இணைந்துள்ளது.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களினால் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்திகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது ஆதரவை வழங்கும்.

உள்ளூராட்சி சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது கை சின்னத்திலும், வெற்றிலை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து சேவல் சின்னத்திலும் போட்டியிட்டது.

அதேவேளை தோட்டப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதோடு, உருவாக்கப்படும் நல்லாட்சியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியான அமைச்சும் வழங்கப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்டிருக்கும் பொழுது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பழைய கட்சி தோல்வியடைவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றமையால் எதிர்வரும் காலத்தில் அனைவரும் இணைந்து ஒரு தனி ஆட்சியை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg