Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹக்கீமை கட்சித் தலைமை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: அன்சில்

In இலங்கை
Updated: 11:12 GMT, Feb 13, 2018 | Published: 11:11 GMT, Feb 13, 2018 |
0 Comments
1131
This post was written by : Risha
Untitled

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் கட்சித் தலைமை பதவியிலிருந்து நீங்கினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்க உடன்படுவேன் என உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தலைமை பதவியிலிருந்து ஹக்கீம் நீக்கப்படாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவேண்டிவரும்.

எனது போராட்டம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானது அல்ல. அது ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு எதிரானதே. இந்த போராட்டத்திலிருந்து ஒருபோதும் நான் சறுகிவிடப் போவதில்லை.

ஹக்கீம் என்ற தனி நபரின் அடாவடித்தனங்களை நான் ஏற்றுக்கொண்டு சென்றிருந்தால் மிக இலகுவாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குரிய தவிசாளர் பதவி எனக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவருக்கெதிராகவும், கட்சியை நம்பி வாக்களிக்கும் எமது மக்களை காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே நாங்கள் வெளியேறி பல போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

நான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அந்த கட்சிக்காகவே பாடுபடுவேன். அதனை தூய பாதைக்கு இட்டுச்செல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)