Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்தில் ஐவர் உயிரிழப்பு:மூவர் படுகாயம்

In இந்தியா
Updated: 12:43 GMT, Feb 13, 2018 | Published: 11:35 GMT, Feb 13, 2018 |
0 Comments
1048
This post was written by : Puvanes
accident-f25

ஆந்திரா மாநிலத்திலுள்ள காளஹஸ்தி பகுதியிலுள்ள கண்டிரிகா சர்க்கரை ஆலைக்கருகில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயங்களுடன் காளஹஸ்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கோதாவரி மாவட்டம் பாலகொல்லு கிராமத்தைச் சேர்ந்த ராமராவ் (50 வயது) மற்றும் குமாரி,  (வயது 47) சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் (16) மற்றும் பிந்து, (18) மேலும் முச்சக்கரவண்டி சாரதி வெங்கட்ரமணா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இவர்கள் அனைவரும் சிவராத்திர தினத்தை முன்னிட்டு, கோவிலில் இடம்பெற்ற சிறப்பு பூசைகளில் கலந்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் வீடு திரும்பியப்போது, எதிரே வந்த லொறி ரக வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 8 பேரில்  ஐவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் காளஹஸ்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழத்தவர்களின் உடலை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)