Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவுடன் வடகொரியா நல்லிணக்க முயற்சி!

In உலகம்
Updated: 12:08 GMT, Feb 13, 2018 | Published: 12:08 GMT, Feb 13, 2018 |
0 Comments
1079
This post was written by : Suganthini

தென்கொரியாவுடன் சமரச முயற்சியை முன்னெடுக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் முயற்சித்துள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக்போட்டி மூலமாக இரு கொரியாக்களுக்கிடையிலான உறவில் சற்று முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்நிலையில், தென்கொரியாவுடன் நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில், வடகொரிய ஜனாதிபதி முன்வந்துள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

வடகொரியா தொடர்ச்சியாக அணுவாயுதச் சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனைகளை முன்னெடுத்துவந்த நிலையில், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையிலான  உறவில் குழப்பம் காணப்பட்டது.

தென்கொரியாவில் தற்போது நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்போட்டியில், வடகொரியக் குழுவினர் கலந்துகொண்டுள்ளதுடன், ஒலிம்பிக்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரியும் கலந்துகொண்டார். இந்நிலையில், தென்கொரியாவுடன் நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்ப வடகொரிய ஜனாதிபதி முயற்சித்துள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg