Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் மியன்மார் அரசாங்கம் கைச்சாத்து

In உலகம்
Published: 12:42 GMT, Feb 13, 2018 |
0 Comments
1044
This post was written by : Suganthini
suki

மியன்மார் அரசாங்கத்துடன், இரண்டு போராளிக் குழுவினர் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையொப்பமிட்டுள்ளனர்.

மியன்மாரில் தசாப்தகாலமாக நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, சமாதான முயற்சியை முன்னெடுக்க மியன்மாரின் தேசிய ஆலோசகரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி விரும்புகின்றார். இந்நிலையில், இரண்டு போராளிக் குழுவினர்களுடன் மியன்மார் அரசாங்கம், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மேற்படி போராளிக் குழுவினருடன் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதைத் தொடர்ந்து, உரையாடல் மூலம் மீதமுள்ள போராளிக்குழுவினருடனும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க முடியுமென, ஆங் சான் சூகி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மியன்மாரில் ராஹினி மாநிலத்திலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் ராஹினி மாநிலத்தில் நிலவிய வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் அடைக்கலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)