Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு கடனில் உள்ளது என்பது பொய்: பந்துல

In இலங்கை
Updated: 12:51 GMT, Feb 13, 2018 | Published: 12:51 GMT, Feb 13, 2018 |
0 Comments
1195
This post was written by : Puvanes

தற்போதைய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்துள்ளனர் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

நல்லாட்சி என்ற பெயரில் முறைகேடான ஆட்சியே நடைபெற்றுகொண்டு வருகின்றது. அனைத்து இடத்திலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. தேசிய வருமானத்தின் கோடிக்கணக்கான பணம் கொள்ளையிடப்படுகின்றது.

நாடு தலைதூக்கமுடியாத கடனில் மூழ்கியுள்ளது என்று பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு, நாட்டின் சொத்துகள் கொள்ளையிடப்படுகின்றது. அதேபோன்று தேசிய சொத்துகள் தனியாருக்கும், வெளிநாடுகளுக்கும் விற்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான தொடர் முறைகேடுகளை உணர்ந்து கொண்ட காரணத்தினால் மாற்றத்தினை எதிர்பார்த்தே மக்கள் மலர்மொட்டுக்கு வாக்களித்து தமது அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளனர் என பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg