Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்தப்பளையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

In இலங்கை
Updated: 13:58 GMT, Feb 13, 2018 | Published: 13:58 GMT, Feb 13, 2018 |
0 Comments
1090
This post was written by : poovannan

கந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகிலிருந்து வயோதிப ஆண் ஒருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் கந்தப்பளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் கணேசன் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாடுகளை தரகர் முறையில் விற்பனை செய்து வந்துள்ள இவர் பல நீண்ட காலமாக தொழிலை விட்டு இருந்துள்ளார். தனது மகனின் பராமரிப்பில் சிலகாலம் வாழ்ந்த இவர் மனவிரக்கத்தி அடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், போர் மலை காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கந்தப்பளை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் சடலம் தற்போது பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)