Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழலை ஒழிப்பதற்கான ஜனாதிபதியின் மக்கள் நிகழ்ச்சித் திட்டம்

In இலங்கை
Updated: 17:24 GMT, Feb 13, 2018 | Published: 17:24 GMT, Feb 13, 2018 |
0 Comments
1233
This post was written by : poovannan

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும் லஞ்சம், ஊழல், மோசடி மற்றும் வீண் விரயங்களுக்கெதிரான விரிவான மக்கள் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப, அனைத்து மக்களினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான புதியதோர் யுகத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் வகையில் ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் வீண்விரயங்களுக்கெதிரான விரிவான அரசியல் மற்றும் சமூக கலாசாரத்தை கட்டியெழுப்புதல், ஆட்சிமுறைமையை வலுப்படுத்தல், சட்ட முறைமையையும், சட்ட நிறுவனங்களையும் முறைப்படுத்துதல் இந்நிகழ்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

இலங்கை தேசத்தின் தற்போதைய சவால்கள் குறித்த தெளிவுடன் நவீன தேசமாக எழுந்திருப்பதற்குத் தேவையான சக்தியை வழங்கி ஊழல், மோசடியற்ற இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி அவர்களின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல், மோசடி, லஞ்சம் மற்றும் வீண்விரயங்களை நாட்டிலிருந்து ஒழித்து நாட்டை சுபீட்சமானதொரு தேசமாக கட்டியெழுப்பும் மக்கள் அரணின் ஒரு தூணாக இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமது பெறுமதியான கருத்துக்கள், முன்மொழிவுகளை 2018 மார்ச் மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் ‘ஊழலுக்கெதிரான தேசிய நிகழ்ச்சித் திட்டம்’, ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு – 1 என்ற முகவரிக்கு அல்லது 011 2431502 என்ற தொலைநகலின் ஊடாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலினூடாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 076 4654600 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு அல்லது 077 5770882 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக ஏ.என்ஆர். அமரதுங்கவை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)