Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியை முன்னெடுப்பது தொடர்பாக விசேட குழுவை நியமிக்க முடிவு!

In இலங்கை
Updated: 17:48 GMT, Feb 13, 2018 | Published: 17:37 GMT, Feb 13, 2018 |
0 Comments
1224
This post was written by : poovannan

ஐக்கிய தேசியக் கட்சியோடு ஜனாதிபதி நடத்திய சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்துள்ளது.

இதன் போது நாளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் அமைச்சரவைக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

பின்னர் இரு கட்சிகளும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வது தொடர்பாக முடிவெடுக்கவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தை முன்கொண்டு செல்லும் வகையில் ஒரு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் அது முன்வைக்கும் யோசனைகளுக்கமைவாக முன்செல்வதற்கும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தரப்பினர் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தக்குழு மூன்று நாட்களுக்குள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கும் எனவும் அதற்கமைவாக நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg