Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு மீது லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – பொலிஸார்

In உலகம்
Updated: 04:04 GMT, Feb 14, 2018 | Published: 04:04 GMT, Feb 14, 2018 |
0 Comments
1227
This post was written by : Suganthini

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மீது லஞ்சம் பெற்றமை தொடர்பாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தனித்தனி வழக்குகளில் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்துகொண்டமை, லஞ்சம் மற்றும் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக, நிரூபிக்கப் போதிய ஆதாரமுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இருப்பினும், மேற்படி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதமர் நெதன்யாஹூ, தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையென்பதுடன், தான் தொடர்ந்து பிரதமராக இருப்பாரெனவும், தொலைக்காட்சியொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.

தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லாமல் போகுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பத்திரிகையான ‘யெடியாட் அக்கோரனாட்’ (Yediot Aharonot), தனக்குச் சாதகமாகச் செய்தி வெளியிட வேண்டுமென்று பிரதமர் கேட்டுக்கொண்டதுடன், இதற்குப் பதிலாக அதன் போட்டிப் பத்திரிகையை கட்டுப்படுத்துவதாகவும், நெதன்யாஹு தெரிவித்தாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி பத்திரிகை ஆசிரியரும் வழக்கை எதிர்நோக்க நேரிடுமெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், பிரபல வர்த்தகரான மொகூல் ஆர்னன் மில்ச்சன் மற்றும் ஏனைய ஆதரவாளர்களிடமிருந்து மில்லியன் பெறுமதியான பரிசுகளை நெதன்யாஹு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg