Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்ட மஹா சிவராத்திரி விரதம்

In ஆன்மீகம்
Updated: 08:13 GMT, Feb 14, 2018 | Published: 04:58 GMT, Feb 14, 2018 |
0 Comments
1263
This post was written by : Anojkiyan

சிவனுக்கு உகந்த விரதமான மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை முதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

உலகளாவிய ரீதியில் இந்து மக்கள் அனுஷ்டிக்கப்படும், சிவனுக்கே உரிய இரவு எனப் பொருள்படும் மஹா சிவராத்திரி, தலைநகர் கொழும்பில் பொன்னம்பலவானேஸ்வரம் உள்ளிட்ட பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.

அத்தோடு,  மன்னார்-திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கிலங்கையின் பஞ்ச ஈச்சரங்களிலொன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் நேற்றிரவு ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சோதிலிக்க குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதன.

சிவனை நினைந்து விரதமிருக்கும் அடியார்களுக்காக பூஜைகளுக்கிடையில் கலை கலாசார நிகழ்வுகளும், கதாப்பிரசங்கங்களும் இடம்பெற்றன.

மேலும்,  மட்டக்களப்பு- பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்திலும் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிவபெருமானுக்கான விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து கலை நிகழ்வாக பட்டிமன்றம், ஆத்மீக, சமய சொற்பொழிவுகள், நடன நிகழ்வுகள் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

மலையகத்தில் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும் சிவராத்திரி நிகழ்வுகள் பக்திபூர்வமாக நேற்று இரவு இடம்பெற்றன. இதன்போது, கலை நிகழ்வுகளும் விசேட ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றன.

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு விஷேட பூஜைகள் இடம்பெற்றன.

நான்கு சாம விஷேட பூஜைகளுக்கும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் இன மத பேதமின்றி கலந்து கொண்டனர்.

shivarathri 4 shivarathri 29 shivarathri 8 shivarathri 1 shivarathri 5 shivarathri 6 shivarathri 7

,oon - Copy

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg