Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல் குற்றச்சாட்டு: குவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதி, நிதியமைச்சர் கைது

In உலகம்
Updated: 04:42 GMT, Feb 14, 2018 | Published: 04:42 GMT, Feb 14, 2018 |
0 Comments
1312
This post was written by : Suganthini

ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை செய்யும் நோக்கில், குவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் நிதியமைச்சர் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டதாக, அரச வழக்கறிஞரொருவர் தெரிவித்துள்ளார்.

குவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வரோ கொலம் (Alvaro Colom) மற்றும் முன்னாள் நிதியமைச்சரும் சர்வதேச ஒக்ஸ்ஃபாம் அமைப்பின் தலைவருமான ஜுவான் அல்பேட்டோ பியூன்டெஸ் (Juan Alberto Fuentes) ஆகியோரே நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை, குவாத்தமாலாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்துவந்த அல்வரோ கொலம், அவரது ஆட்சிக்காலத்தல் பாரிய பொதுப் போக்குவரத்துத் திட்டமொன்றை முன்னெடுத்திருந்தார். இதன்போது, பேருந்துகள் கொள்வனவு செய்தமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி சிக்கியுள்ளார்.

மேலும், பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் முன்னாள் அமைச்சர்கள் கையொப்பமிட்டமை தொடர்பாக, 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும், ஹெய்ட்டியில் தொண்டுப் பணியாளர்களினால் சிலர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாகவும் அறிக்கை வெளிவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியத் தொண்டு நிறுவனமொன்றின் அழுத்தத்துக்கு மத்தியில் முன்னாள் நிதியமைச்சர் கைதுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg