Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போபர்ஸ் ஊழல் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!

In இந்தியா
Updated: 06:09 GMT, Feb 14, 2018 | Published: 05:08 GMT, Feb 14, 2018 |
0 Comments
1080
This post was written by : Ravivarman

போபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை அமர்வில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த 1986-ம் ஆண்டு இராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்குவதற்காக போபர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.1437 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது.

இதனால், பாஜ.க.வை சேர்ந்த அஜய் அகர்வால் என்பவர் போபர்ஸ் ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

குறித்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகின்றது. இந்நிலையிலேயே இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் திடீரென விசாரணையில் இருந்து விலகியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி போபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் இதற்கான புதிய அமர்வு அமைக்கப்படும் என வழக்கை விசாரித்து வரும் அமர்வு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg