Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறீஸ் – துருக்கி கடற்பரப்பில் படகு விபத்து: மூவர் உயிரிழப்பு

In
Updated: 05:06 GMT, Feb 14, 2018 | Published: 05:06 GMT, Feb 14, 2018 |
0 Comments
1138
This post was written by : Suganthini

கிறீஸ் மற்றும் துருக்கிக்கிடையிலான கடற்பரப்பில், புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று கவிழ்ந்ததில், மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளதாக, துருக்கி அனர்த்த மற்றும் அவசரப்பிரிவு நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 8 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகே, நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று கவிழ்ந்துள்ளது.

மீட்புப் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதுவரையில் 3 சடலங்களை மீட்டுள்ளதாகவும், இவற்றில் 12 மற்றும் 4 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களின் சடலங்கள் அடங்குவதாகவும், அந்நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, நீரில் மூழ்கிக் காணாமல் ஏனையோரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர், கிறீஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்நிலையம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg