Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருணைக்கொலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு திருநங்கை கடிதம்!

In இந்தியா
Updated: 06:53 GMT, Feb 14, 2018 | Published: 05:50 GMT, Feb 14, 2018 |
0 Comments
1061
This post was written by : Varatharajan Yuganthini
girl 1

விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்படாத திருநங்கை ஒருவர், தன்னை கருணைக் கொலை செய்யுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம்  எழுதியுள்ளார்.

வேலைக்கு தெரிவுசெய்யப்படாத காரணத்தால், தமது அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதென குறிப்பிட்டுள்ள ஷானவி என்ற குறித்த  திருநங்கை, நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த  ஷானவி பொன்னுசாமி  பிறவியில் ஒரு ஆணாவார். சென்னை ஏர் இந்தியா விமான சேவையில் வாடிக்கையாளர் தொடர்புப் பகுதியில் சுமார் ஒரு வருடம் கடமையாற்றினார். அதன் பின்னர் வெளிநாட்டிற்குச் சென்று தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்ட அவர், கடந்த மாதம் ஏர் இந்தியா விமானச் சேவையில் பணிப்பெண் பதவிக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு தோற்றினார். நேர்முகத் தேர்தவில் அவர் சிறப்பாக செயற்பட்ட போதும், திருநங்கை என்பதால் தன்னை நிராகரித்ததாக ஷானவி குறிப்பிட்டுள்ளார்.

தமக்க அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஷானவி, தமக்கு வேலை வழங்க உத்தரவிடுமாறு கோரி சென்னை உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தினால் அனுப்பப்பட்ட நோட்டீஸூக்கு மத்திய அரசும், ஏர் இந்தியா நிறுவனமும் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை. இந்நிலையில், தன்னை கருணைக் கொலை செய்யுமாறு ஷானவி தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)