Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்மார்க் இளவரசர் ஹென்ரிக் இயற்கை எய்தினார்

In
Updated: 05:45 GMT, Feb 14, 2018 | Published: 05:45 GMT, Feb 14, 2018 |
0 Comments
1194
This post was written by : Suganthini

டென்மார்க் இளவரசர் ஹென்ரிக் தனது 83ஆவது வயதில், ஃபிரெடென்ஸ்போர்க் (Fredensborg) கோட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இயற்கை எய்தியுள்ளதாக, ரோயல் இல்லம் தெரிவித்துள்ளது.

டென்மார்க் மகாராணி மார்க்கிரெத்தின் (Margrethe) கணவரான இளவரசர் ஹென்றிக், அண்மையில் எகிப்துக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளையில் சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடம்பில் கட்டியொன்று காணப்பட்டமை மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், வைத்தியசாலையிலிருந்து தனது அரண்மனைக்குத் திரும்பியிருந்த இவர், உறக்கத்தின்போது இயற்கை எய்தியுள்ளதாகவும், ரோயல் இல்லம் கூறியுள்ளது.

இவரது இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg