Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரசாயன ஆயுதப்பாவனை: சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

In உலகம்
Updated: 06:40 GMT, Feb 14, 2018 | Published: 06:40 GMT, Feb 14, 2018 |
0 Comments
1086
This post was written by : Suganthini

சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், சிரியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.

பரிஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியாவில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், பொதுமக்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை தொடர்பாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரசாயன ஆயுதங்களை சிரிய அரசாங்கம் பயன்படுத்தியமை தொடர்பாக நிரூபிக்கப்பட்டால், அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

‘இது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படும் நிலையில், சிரிய அரசாங்கம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமைக்கான எந்தவித ஆதாரங்களையும், பிரான்ஸ் புலனாய்வுப் பிரிவினர் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை’ எனவும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் போராளிக் குழுவினருக்கும் அரசாங்கப் படையினருக்குமிடையில் கடந்த ஜனவரி முதல் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்தே, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)