Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இடைக்காலத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு: அமெரிக்க எச்சரிக்கை

In உலகம்
Published: 07:22 GMT, Feb 14, 2018 |
0 Comments
1058
This post was written by : Suganthini
russi

அமெரிக்காவில் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில், ரஷ்யா தலையிட முயற்சிக்குமென, அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் குழுக் கூட்டத்தின்போது, அமெரிக்கத் தேசிய புலனாய்ப் பிரிவின் பணிப்பாளர் டான் கோட்ஸ் (Dan Coats) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டமைபோன்று, நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு காணப்படுமென்று நாம் கருதுகின்றோம்.

இந்நிலையில், இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரங்களை முன்னெடுக்க ரஷ்யா முயற்சிக்குமென்பதுடன், தவறான அறிக்கைகளைப் பரப்புவதற்கும் ரஷ்யா முயற்சிக்கும்’ என்றார்.

மேலும், ‘இடைக்காலத் தேர்தலில் ரஷ்யா தலையிட முயற்சிப்பது தொடர்பாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, நாம் அவதானமாகச் செயற்பட வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)