Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிநாட்டில் கற்பதற்கும் நீட் பரீட்சை அவசியம்: மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்

In இந்தியா
Updated: 09:21 GMT, Feb 14, 2018 | Published: 08:29 GMT, Feb 14, 2018 |
0 Comments
1056
This post was written by : Kemasiya
hgjt

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் மருத்துவத்துறையில் கல்வி கற்பதற்கு நீட் தேர்வு அவசியம் என்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு அவசியம் என கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் அமுலுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து மருத்துவத்துறையில் கற்கும் மாணவர்கள் நீட் தேர்வில் சித்தி எய்தினால் மாத்திரமே மருத்துவ கல்லூரியில் கற்ற முடிந்தது.

இந்நிலையில், தற்போது இந்தியாவைச்  சேர்ந்த எந்தப் பிரஜையும் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்க வேண்டுமாயின்,  உள்நாட்டில் நடத்தப்படும் நீட் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கற்றுவிட்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்து அனுமதிப்பத்திரம் இன்றி வைத்தியராக தொழில்புரிபவர்களை தடுக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை நிறுத்தவேண்டுமென ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களும் கண்டனங்களும் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது இப்புதிய அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)