Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக்போட்டி: வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தென்கொரியா பொறுப்பேற்பு

In உலகம்
Updated: 08:49 GMT, Feb 14, 2018 | Published: 08:49 GMT, Feb 14, 2018 |
0 Comments
1098
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக, தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரியக் குழுவினரின் உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்காக 2.86 பில்லியன் வொன் செலவாகியுள்ளதாகவும், இந்நிலையில், வடகொரியக் குழுவினரின் செலவீனத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொள்ளும் நோக்கில், வடகொரியாவின் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களை உள்ளடக்கிய சுமார் 400 பேரைக் கொண்ட குழுவினர், தென்கொரியாவுக்குச் சென்றனர். இவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை தென்கொரியா ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இதேவேளை, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொண்டுள்ளமை மைல் கல்லெனவும், இதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்குமெனவும், தென்கொரிய ஒருமைப்பாட்டு அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)