Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேருந்து கட்டணம் குறையும் வரை தொடர் போராட்டம்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 09:08 GMT, Feb 14, 2018 | Published: 09:08 GMT, Feb 14, 2018 |
0 Comments
1081
This post was written by : Kemasiya

பேருந்து கட்டணத்தை குறைக்கும் வரையில் தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்டண உயர்வை வலியுறுத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவித்த ஸ்டாலின், ‘ரூபாய் கணக்கில் உயர்த்திய கட்டணத்தை சதக்கணக்கில் குறைத்து கண்ணீர் துடைப்பு நாடகம் போடுகிறது தமிழக அரசு.

உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்காமல் எக்காரணம் கொண்டும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்’ எனக்  கூறியுள்ளார்.

அத்துடன் போராட்டம் நடத்திய மாணவர்கள் உட்பட பலர் மீது பொலிஸார் வழக்க தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த வழக்குகள் மீளப்பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போதுள்ள ஆட்சியை தாம் கவிழ்க்க போவதில்லை என்றும், நேர்மையாக ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து ஆட்சியை அமைக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

cxfghdf zfdszd

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg