Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி குறையும்: ராகுல்காந்தி

In இந்தியா
Updated: 09:37 GMT, Feb 14, 2018 | Published: 09:37 GMT, Feb 14, 2018 |
0 Comments
1108
This post was written by : Kemasiya

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடாகாவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வந்த ராகுல்காந்தி, நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தனது கடைசி சுற்றுப்பயணத்தின் போது மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

”ஒரு சீரான நிலையில் வரி உச்சவரம்பை நிர்ணயம் செய்வோம். இந்த திட்டத்தில் நிலவும் குழப்பங்கள் அனைத்தையும் நீக்குவோம். நீங்கள் குறிப்பிட்டு சொல்லும் வகையில் விவரங்கள் எங்களிடம் வந்தால் அதுபற்றி நாடாளுமன்ற கூட்டத்தில் பிரச்சினையை கிளப்புவோம்.

இந்த ஜி.எஸ்.டி. விஷயத்தில் மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதுதான் காங்கிரசின் நோக்கம். நாடு முழுவதும் ஒரே வரி, அதுவும் 18 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படும். இது தான் எங்களின் ஜி.எஸ்.டி.” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg