Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் ஓபனில் ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி!

In டெனிஸ்
Updated: 10:11 GMT, Feb 14, 2018 | Published: 10:08 GMT, Feb 14, 2018 |
0 Comments
1045
This post was written by : Litharsan
170606124015-sharapova-fashion-wimbledon-2004-super-169

கட்டார் ஓபன் டெனிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதற்சுற்றுக்கான ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்விடைந்தார்.

டோகா நகரில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக டெனிஸ் தரவரிசையில் 92ஆவது இடத்திலிருந்த மோனிகாவை 41 ஆவது இடத்திலிருந்த ஷரபோவா எதிர்கொண்டார்.

அந்தவகையில் 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் ஷரபோவா தோல்வியடைந்து கட்டார் ஓபினிலிருந்து வெளியேறினார்.

இதுவரை 5 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த அவருக்கு ஊக்கமருந்து பாவித்தமைக்காக சிலகாலம் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த மாதம் நடைபெற்ற அவுஸ்ரேலிய ஓபனில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் இரண்டாம் சுற்றுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)