Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடும்பப் பெண் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!

In இலங்கை
Updated: 11:18 GMT, Feb 14, 2018 | Published: 09:59 GMT, Feb 14, 2018 |
0 Comments
1349
This post was written by : poovannan

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் இன்று (புதன்கிழமை) பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்ப பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் (வயது 24) கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் இடம்பெறும்கொண்டாட்ட நிகழ்வொன்றிற்கு அயலவர்கள் சென்றுள்ளமையை நன்குணர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருக்க முடியும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை பார்க்க அவரது சகோதரி வந்த போது, அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு, அயலவர்களிடம் தெரிவித்ததன் பின்னர், பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

இதே வேளை குறித்த பெண் விவாகரத்து பெறுவதற்கு நீண்ட காலமாக போராடி வந்ததாகவும் இந்நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் குறிப்பிடுகின்றார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)