Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“ஜெயாவை அப்பலோவுக்கு சென்று சந்திக்கவில்லை” – விவேக்

In இந்தியா
Updated: 04:00 GMT, Feb 15, 2018 | Published: 09:59 GMT, Feb 14, 2018 |
0 Comments
1102
This post was written by : Varatharajan Yuganthini
Vivek 01

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தா சுகயீனமுற்று அப்பலோ மருத்துவனையில் அனுமதித்திருந்தப்போது,  அவரை சென்று சந்திக்கவில்லை  என, சசிகலாவின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகியுமான விவேக் ஜெயராமன்  நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தாவின் மரணம் தொடர்பில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைக்குழுவினால் 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் விவேக் ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது, விவேக்கிடம் தொடர்ச்சியாக  மூன்று  மணித்தியாலங்கள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டப்போது அவர் குறிப்பிட்டதாவது,

‘முதலமைச்சர் ஜெயலலித்தா சுகயீனமுற்று வைத்தியசாலையில் இருந்த காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்தேன் இதனால் அவரைச் சென்று பார்க்கவில்லை அத்துடன் ஜெயலலித்தா சுகயீன முற்றமைக்கான காரணம் என்ன என எனக்கு தெரியாது” என, விசாரணை ஆணைக்குழுவில் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணை ஆணைக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு விவேக்குக்கு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

குறித்த விசாரணையின்போது, தான் எந்தவொரு ஆவணங்களையும் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை எனவும் நடைபெற்று முடிந்த விசாரணை தொடர்பில் வெளியே தெரிவிப்பது தவறாகும் எனவும் விவேக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகியான விவேக் ஜெயராமன்,  கடந்த வருடம் சொத்துக்கள் மற்றும் வருமான வரிகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கதோர் விடயமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)