Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழில் தேசிய கீதம் பாடும்போது வாக்குகளை ஐ.தே.க. இழக்கின்றது -திலக் மாரப்பன கண்டுபிடிப்பு

In இலங்கை
Updated: 12:11 GMT, Feb 14, 2018 | Published: 12:11 GMT, Feb 14, 2018 |
0 Comments
1260
This post was written by : poovannan
UNP-logo

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட ஒவ்வொரு முறையும், ஐ.தே.க. 50 ஆயிரம் சிங்கள – பௌத்த வாக்குகளை இழக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஐ.தே.க.வின் உயர்மட்டக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க.வுக்குப் பின்னடைவு ஏற்பட்டமைக்கு சுதந்திர நாளன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதே முக்கிய காரணம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் அவரது இந்தக் கருத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, “சமுர்த்தி அமைச்சு ஐ.தே.க.விடம் இல்லாததால், மக்களுடன் அதிகளவில் நெருக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே அந்த அமைச்சை பெற்றுக் கொள்வதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஹரிசன் கருத்துத் தெரிவிக்கையில், “விவசாயிகளுக்கு உரிய வேளையில் இரசாயனப் பசனை கிடைக்காமையினால் கிராமங்களில் ஐ.தே.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சிங்கள – பௌத்த வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள முன்னணி இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள இந்தச் செய்தி தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சில் வினவியபோது இதன் உண்மைத் தன்மை குறித்து அறிந்து தெரியப்படுத்துவதாக ஆதவனுக்கு அறிவிக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)