Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபியாவில் லொறி விபத்து: 23 குடியேற்றவாசிகள் உயிரிழப்பு

In உலகம்
Updated: 11:57 GMT, Feb 14, 2018 | Published: 11:57 GMT, Feb 14, 2018 |
0 Comments
1134
This post was written by : Suganthini

லிபியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிபியாவின் வனி வலித் நகரில் இன்று (புதன்கிழமை) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. சுமார் 300 பேருடன் பயணித்த மேற்படி லொறி வளைவொன்றில் திரும்ப முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானது.

சோமாலியா மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரும் நோக்கில் மேற்படி லொறியில் பயணித்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg