Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்த்தமற்ற ஒற்றுமை எமக்கு வேண்டாம் – கஜேந்திரகுமார்

In இலங்கை
Published: 12:38 GMT, Feb 14, 2018 |
0 Comments
1196
This post was written by : Varshini

தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோருவது விந்தையாக உள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நன்மைகளையும் செய்யவில்லையென்ற குற்றச்சாட்டை முன்வைத்த கஜேந்திரகுமார், தற்போது ஒன்றுபடுமாறு கூறுவதை ஏற்க முடியாதெனக் குறிப்பிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ அதன் பங்காளிக் கட்சிகளுக்கு தாம் எதிரானவர் அல்லவென்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

எனினும், ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணைபோவதாக கஜேந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆகையால் அர்த்தமற்ற ஒரு ஒற்றுமை தேவையில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கவும், அக்கட்சிகளின் மக்கள் நலன்சார் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கமாட்டோம் என்றும் கஜேந்திரகுமார் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)