Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிமலை பிரதமராக கொண்டு ஐ.ம.சு.கூ அரசாங்கத்தை அமைக்க முயற்சி!

In இலங்கை
Updated: 16:22 GMT, Feb 14, 2018 | Published: 15:26 GMT, Feb 14, 2018 |
0 Comments
1203
This post was written by : poovannan
9_Thilanga

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள அமைச்சர் ஒருவரை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

எழுத்து மூலமான அக்கோரிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக அமைப்பின் செயலாளர் திலங்க சுமதிபால இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கம் ஒன்ரறை அமைப்பது தொடர்பாக யோசனையொன்றை முன்வைத்து ஜனாதிபதி அமைத்திரிபால சிறிசேனவிற்கு ஐ.ம.சு.கூ. பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையை அடுத்து பல்வேறு கட்சிகளும் தமது வியூகங்களை வகுத்து செயற்படுகின்றன. அந்தவகையிலேயே ஐ.ம.சு.கூ. இவ்வாறான வியூகத்தை அமைத்திருக்கின்றது.

நாங்கள் நிமல் சிறிபாலடிசில்வாவை பிரதமராகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கின்றோம். இதற்காக நாம் சிறுபான்மைக் கட்சிகளை நாடியுள்ளோம். அத்தோடு கூட்டு எதிரணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம் சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)